உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு

அரசாணைப்படி ஜாதி சான்று: தமிழக முதல்வருக்கு மனு

ஈரோடு : தமிழக அரசின் ஆணைப்படி ஏழு உட்பிரிவினருக்கும், அருந்ததியர் என ஜாதி சான்றிதழ் வழங்குமாறு, சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் வடிவேல் ராமன், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பட்டியலின மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியர் சமூகத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி உள் இட ஒதுக்கீடு, 2009ல் அப்போதைய அரசு வழங்கியது. அருந்ததியர் சமூகத்தில் ஏழு உட்பிரிவுகள் சக்கிலியர், மாதாரி, மாதிகா, பகடை, தோட்டி, ஆதி ஆந்திரா மற்றும் அருந்ததியர் ஆகிய உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தனி உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், வருவாய் துறை ஜாதி சான்றிதழ் வழங்கும்போது மேற்கண்ட உட்பிரிவு பெயர்களில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அருந்ததியர் என குறிப்பிடுவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ மற்றும் பொறியியல் கலந்தாய்வு, வேலை வாய்ப்பிலும் தனி உள் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசாணைப்படி (எண்-50, நாள்: 29.04.2009) ஏழு உட்பிரிவினருக்கும் அருந்ததியர் என ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ