உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் கோவிலில் 14 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

பாரியூர் கோவிலில் 14 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு

கோபி: கோபி அருகே பாரியூரில், பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க, கண்காணிக்க வசதியாக, 2011ல் கருவறை முதல் ராஜகோபுரம் வரை, 14 இடங்களில், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் கை கழுவும் பகுதியில் பல்பை கழற்றி வைத்துவிட்டு, 2022ல் மர்ம ஆசாமி கோவிலுக்குள் நுழைந்தார். வெளிப்பிரகார மண்டபத்தில் உண்டியலின் கைப்பிடியை திறக்க முயன்றார். உண்டியலில் இருந்த சென்சார் கருவியால், அலாரம் ஒலிக்கவே மேற்கு வாயில் தடுப்புச்சுவர் வழியாக ஆசாமி தப்பினார். அப்போது கோவிலில் கோபி போலீசார் துப்பு துலக்கியதில், கோவிலில் இருந்த 'சிசிடிவி' கேமரா வீடியோ பதிவு தெளிவின்றி இருந்தது.இதனால் அறநிலையத்துறை சார்பில், நான்கு லட்சம் ரூபாய் செலவில், அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட, இருட்டிலும் துல்லியமாக பதிவு செய்யும், நவீன கேமரா பொருத்தும் பணி, ஓரிரு நாட்களாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த கேமராக்களை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய கேமராக்கள் பொருத்தப்படுவதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ