தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி
காங்கேயம்: ஊதியூர், ஐயர் காலனியில் சோமியன், 28, என-பவர் கட்டட வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு இரு குழந்-தைகள் உள்ளனர். இவரது முதல் மகள் இனியா, 2, நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்-போது சவுமியா, தன் குழந்தை இனியாவை காணவில்லை என தேடி பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்-துள்ளார்.பின் குழந்தையை மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். ஊதியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.