உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஈரோடு, ஈரோடு லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ஏப்.,19 ல் நடத்தப்பட்டு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரியில், ஜூன், 4ல் எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்து, முன்னேற்பாடு பணிகளை விரைவுபடுத்தி கூறியதாவது:ஓட்டு எண்ணும் மையத்தில், தேவையான அடிப்படை வசதி, ஓட்டு எண்ணும் அறைக்கான பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட்டது. குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடிகளையும் ஆய்வு செய்யப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு கூறினார்.காங்கேயத்தில் ஆய்வுஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், காங்கேயம் தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஈரோடு லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின் காங்கேயம், ஊதியூரில் ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை