உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, வரும் நவ.,2ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இதை தொடர்ந்து, 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, தினமும் ேஹாமம், அபிஷேக ஆராதனை, சண்முகர் அர்ச்சனை, தங்கமயில், தங்கரத புறப்பாடு நடக்கிறது. நவ.,7ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சக்திவேல் வாங்-குதல், 12:00 மணிக்கு சூரசம்ஹாரம், பன்னீர் அபிஷேகம் நடக்கி-றது. நவ.,8ம் தேதி காலை, 9:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ