பவானி: பவானி-ஈரோடு சாலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நெடுஞ்-சாலை எல்லைக்கல் வரை, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனிந-பர்களுக்கு சாதகமாக பணி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்-துள்ளது.ஈரோடு-பவானி-மேட்டூர் -தொப்பூர் வரை, 85 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலையாக (என்.எச்.544) அறிவிக்கப்பட்டு, ஓராண்-டுக்கும் மேலாக சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்-காக நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் ரோட்-டோர ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்பட்டு விரிவுபடுத்தப்-பட்டன. குடியிருப்பு பகுதியில் அளவீடு செய்து, கான்கிரீட் மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டது. முறையாக பணி நடந்-ததால், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சித்தார், மூன்று ரோடு பகுதியில், போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்-கின்றன.ஆனால், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் பவானி நகராட்சி பகுதியில், மழைநீர் வடிகால் கட்டும் பணி, ராணா நகரி-லிருந்து லட்சுமி நகர் வரை, 4 கி.மீ.,க்கு நடக்கிறது. இதில் நெடுஞ்சாலை இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு அதிகம் உள்-ளது.இந்த ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றாமல் அவசர கதியில், தனி நபர்களுக்கு சாதகமாக பணி நடக்கிறது. அத்துடன் மழைநீர் வடிகால் கட்டுமான பணியும் தரமாக நடக்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.மொத்தத்தில் சாலை விரிவாக்கத்தில் ஒரு தலைபட்சம், தரமற்ற கட்டுமானம் உள்ளிட்ட பிரச்னைகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும், நடவடிக்கை எடுக்-கவில்லை என்று, மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.