துாய்மை திட்டம் குறித்து ஆலோசனை
ஈரோடு, துாய்மை இந்தியா மிஷன் 2.0 திட்டம் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: இதில் அனைத்து துறை அலுவலர்களும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு, அலுவலகங்களில் பயனற்ற நிலையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும் என்றார். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களுக்கு கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்து, பயனற்ற நிலையில் உள்ள கழிவு பொருட்களை அகற்ற அறிவுறுத்தினார்.