உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சேதமான கீரிப்பள்ள ஓடை தடுப்பு சுவர்; வாகனங்கள் பல்டி அடிக்கும் அபாயம்

சேதமான கீரிப்பள்ள ஓடை தடுப்பு சுவர்; வாகனங்கள் பல்டி அடிக்கும் அபாயம்

கோபி : பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்ததால், கோபி கீரிப்பள்ள ஓடைக்குள், வாகனங்கள் பல்டி அடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கோபி நகரின் மையப்பகுதியில் செல்லும் கீரிப்பள்ளம் ஓடை, குடியிருப்பு மற்றும் ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு வடிகாலாக உள்ளது. தினமும் சராசரியாக, 150 கன அடி வரை கழிவுநீர் செல்கிறது. பாரியூர் அருகே பதி என்ற இடத்தில், தடப்பள்ளி வாய்க்காலில் சென்று கழிவுநீர் கலக்கிறது. இந்நிலையில் நகராட்சி சார்பில், மத்திய மற்றும் மாநில அரசு நிதியாக, 14 கோடி ரூபாய் மதிப்பில், கசடு மற்றும் கழிவு சுத்தகரிப்பு நிலையம் கட்டமைப்பு பணி கடந்தாண்டில் துவங்கியது.அதன்படி, வீராசாமி வீதி அருகே கட்டமைப்பு பணி இன்று வரை ஆமை வேகத்தில் நடக்கிறது. கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், கீரிப்பள்ள ஓடையின் குறுக்கே மேற்கொள்ளும் கட்டமைப்பாலும், அதனுள் தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடியாலும், குடியிருப்புக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளதாக, கடந்த, 18ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில் கடந்த, 22ல் பெய்த பலத்த மழையால், கீரிப்பள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் நகராட்சி சார்பில், ஓடையின் பாலத்தில் இருந்து பொக்லைன் மூலம் மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது. அந்த சமயத்தில் பொக்லைன் இயக்கியபோது, கீரிப்பள்ள ஓடை பாலத்தின், தென்பகுதி தடுப்புச்சுவர் முழுவதுமாக சேதமடைந்தது. நமது நாளிதழில் முன்பே சுட்டிக்காட்டியது போல், பலத்த மழைக்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், மழைநீரும் எளிதாக வெளியேறி இருக்கும், பாலத்தின் தடுப்புச்சுவரும் சேதமடைந்திருக்காது.தற்போது தடுப்பு சுவரின்றி, அவ்வழியே பயணிப்போர் வாகனங்களுடன் ஓடைக்குள் பல்டி அடிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, தடுப்பு சுவர் வசதியை பலப்படுத்த, வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில், ''தடுப்புசுவர் இருந்த இடத்தில், இரும்பு கிரில் மூலம் தடுப்பு அமைக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ