உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சரணாலய அறிவிப்பை கண்டித்து தாமரைக்கரையில் ஆர்ப்பாட்டம்

சரணாலய அறிவிப்பை கண்டித்து தாமரைக்கரையில் ஆர்ப்பாட்டம்

அந்தியூர்:பர்கூர் வனப்பகுதியை வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து, மலைவாழ் மக்கள், பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், தாமரைக்கரையில் உள்ள, பர்கூர் வனச்சரக அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வன உரிமைச்சட்டம்-2006ன் படி, மக்களின் பாரம்பரிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். கிராமசபையில் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதை மீறி சரணாலய அறிவிப்பு வெளியிட்டது வன உரிமை சட்டத்தை மீறுவதாகும். இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட முடியாது. மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கிறது. தன்னிச்சையான அறிவிப்பை வனத்துறை பெற வேண்டும் என்று கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொங்காடை, தம்புரெட்டி, தாளக்கரை, சோளகணை, பர்கூர், தாமரைக்கரை, தேவர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடி மக்கள் பங்கேற்றனர். இதுதொடர்பான கோரிக்கை மனுவை, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தபாலில் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை