உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ௩௨ ஆண்டுக்கு முன் வழங்கிய பட்டாவில் நிபந்தனைகளை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

௩௨ ஆண்டுக்கு முன் வழங்கிய பட்டாவில் நிபந்தனைகளை நீக்க கோரி ஆர்ப்பாட்டம்

பவானி,: பவானி நகராட்சி ஏழா-வது வார்டு, திருவள்ளுவர் நகர் பகுதியில், 160-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு, 32 ஆண்டுகளுக்கு முன் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இவர்கள் கைத்தறி, நெசவு மற்றும் சாயத்தொழில் செய்து வருகின்றனர்.ஆனால், வீட்டுமனை பட்டாவில் உள்ள நிபந்தனைகளை நீக்கவில்லை. இந்நிலையில் நிபந்தனைகளை நீக்கம் செய்து தரக்கோரி, அந்தியூர் பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி ஆர்.ஐ., மாதேஸ்வரி, வி.ஏ.ஓ., குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, கோரிக்கை மனு அளித்து, கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை