உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிக வரித்துறையினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வணிக வரித்துறையினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு;தமிழ்நாடு வணிக வரித்துறை அலுவலர் சங்கம் சார்பில், ஈரோட்டில் மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள, வணிக வரித்துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.திருநெல்வேலியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாநில துணை வணிக வரி அலுவலர்களை, பணியமர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புவதுடன், வேலைப்பளுவுக்கு காரணமான அனைத்து சூழல்களையும் களைய வேண்டும். வணிக வரித்துறை அலுவலர்களின் பிற கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர் விஜி, வாசுகி, ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை