உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரி ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி, 4 ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.விவசாயிகளுக்கு உறுதியளித்தபடி, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும்.டில்லியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில், உயிரிழந்த விவசாயி கரண்சிங் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழக அரசு கோரிய வெள்ளி நிவாரண நிதி, 37,000 கோடி ரூபாயை உடன் வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான வரைவறிக்கையை நிராகரிக்க வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தென்பெண்ணையாறு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை