உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

அந்தியூர்: பர்கூர் வனப்பகுதியில், 33 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜன., 31ல், 80.114 ஹெக்டர் பரப்பு கொண்ட வனப்பகுதியை, தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயமாக அரசு அறிவித்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மலைவாழ் மக்களுடன் பல துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், பர்கூர்மலையை சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2006ல் கொண்டு வரப்பட்ட வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மக்களும், கால்நடைகளும் நுழையக்கூடாது என்பதால், பர்கூர் மாட்டினம் அழிந்து விடும். மாடுகளையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும். எனவே, வன சரணாலய அறிவிப்பை, அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், அந்தியூர் தாசில்தார் கவியரசிடம், மக்கள் மனு வழங்கினர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, ௫௦க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !