மாநகராட்சி 49வது வார்டில் சிதிலமடைந்த கழிப்பிடம்
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 49வது வார்டு காமராஜர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அருகேயுள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கழிப்பிடம் சிதிலமடைந்தும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக கழிப்பிடம் மாறியுள்ளது. கழிப்பிடத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.