உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்த்த கிடா பாய்ந்தது வித்தியாசமான பேனர்

வளர்த்த கிடா பாய்ந்தது வித்தியாசமான பேனர்

கோபிசெட்டிபாளையம்: ஆட்டுக்கிடா மார்பில் பாய்ந்து ரத்தம் வழிவது போல், பேனர் வைத்துள்ளார் அ.தி.மு.க., போட்டி வேட்பாளர். கோபி, வெள்ளாங்கோவில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் சீட் கிடைக்காததால், போட்டி வேட்பாளராக யூனியன் கவுன்சிலர் மதிவாணன், அ.தி.மு.க., வேட்பாளர் தன்னாசியை எதிர்த்து களமிறங்கியுள்ளார். சென்றாண்டு வரை மதிவாணனும், தன்னாசியும் இரட்டையர்களாக வலம் வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே பதவிக்கு மோதுவதால், வெள்ளாங்கோவில் அரசியலில் களம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில், மதிவாணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிமுக கூட்டம் வெள்ளாங்கோவிலில் நடந்தது. அ.தி.மு.க., அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் வேட்பாளர் சுந்தரராஜன், மேலவை பிரதிநிதி சபரிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தனது சொத்து விவரம், கடன் விவரங்களை மதிவாணன் வெளியிட்டார். இவரது அணி வேட்பாளர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர். கூட்ட அரங்கில் இருந்த பேனரில், மதிவாணன் மார்பில், ஆட்டுக்கிடா ஒன்று முட்டி ரத்தம் வழிவது போல் படம் இடம்பெற்றிருந்தது. 'வளர்த்த கிடா மார்பில் பாய்வதாக' மதிவாணன் சுட்டிக்காட்டுவது யாரை? என்று வெள்ளாங்கோவில் மக்கள் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி