உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் அரிசி பதுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

ரேஷன் அரிசி பதுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

ஈரோடு: 'ரேஷன் அரிசி பதுக்கி வியாபார நோக்கத்துக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் காமராஜ் எச்சரித்துள்ளார். சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள முறுக்கு கடைகள், இட்லி மாவு விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்களில் ரேஷன் அரிசி பதுக்கி, வியாபார நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. ஈரோடு பறக்கும்படை தனித்துணை தாசில்தார் மற்றும் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். ரங்கசமுத்திரம், ராஜவீதியில் உள்ள ஒரு முறுக்கு கடையில் 365 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் காமராஜ் கூறுகையில், ''ரேஷன் அரிசியை வியாபார நோக்கத்துக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை