உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ் - ஆட்டோ மோதி டிரைவர் படுகாயம்

பஸ் - ஆட்டோ மோதி டிரைவர் படுகாயம்

ஈரோடு: ஈரோடு அருகே அரசு பஸ்ஸூடன், 'மினி டோர்' ஆட்டோ மோதியதில், ஆட்டோ டிரைவர் படுகாயமடைந்தார். ஈரோடு, சி.என்., கல்லூரி அருகே வசிப்பவர் ஆட்டோ டிரைவர் குணா. இவரது சொந்த ஊர் மைசூரு. ஈரோட்டில் தங்கி பணிபுரிந்து வருகிறார். தண்ணீர் பந்தல் பாளையத்தில் உள்ள சைசிங் மில்லில் லோடு ஏற்றுவதற்காக, நேற்று மாலை 3 மணிக்கு 'மினி டோர்' ஆட்டோவை ஓட்டி சென்றார். சூளை அருகே செல்லும் போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது, சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ்ஸுடன், ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில், 50 அடி தூரம் பின்னோக்கி வந்த ஆட்டோ, ரோடு ஓரமாக இருந்த மரத்தில் மோதி நின்றது. டிரைவர் குணா படுகாயத்துடன் ஆட்டோவில் மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் ஆட்டோ கதவை உடைத்து, அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பஸ் முன்புறம் சேதமடைந்தது. பயணிகள் காயமின்றி தப்பினர். ஈரோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை