மேலும் செய்திகள்
முற்றுகை போராட்டம்; மாற்றுத்திறனாளிகள் கைது
12-Nov-2025
ஈரோடு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமை வகித்தார். உணவு, மருத்துவம் உள்ளிட்ட செலவுகள் அதிகமாகும் நிலையில், தமிழக அரசு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆந்திராவை தொடர்ந்து, கர்நாடகா, புதுச்சேரியில் உதவித்தொகையை உயர்த்திவிட்டனர். தமிழக அரசும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி முற்றுகையிட்டனர். சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலகம் முன், பெருந்துறை சாலையில் மறியலில் ஈடுபட அமர்ந்ததும், 30 பெண்கள் உட்பட, 116 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.*கோபி சப்-கலெக்டர் ஆபீஸ் முன், மாவட்ட தலைவர் சாவித்ரி தலைமையில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
12-Nov-2025