உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

ஈரோடு : ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுடனான, மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பேரூராட்சிகள் துறை சார்பில் நிலுவை பணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் தாளவாடியில் மூலிகை பண்ணை அமைத்தல், தொழிலாளர் நலத்துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசின் உரிமை வழங்குதல், அங்கன்வாடி கட்டடங்களில் கழிப்பிட வசதி அமைத்து தருதல், பர்கூர் துணை ஒழுங்குழுறை விற்பனை கூடத்துக்கு அணுகுசாலை அமைத்தல், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்குவழி சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவில் முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூடுதல் கலெக்டர் மணீஷ், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆவின் பொது மேலாளர் கவிதா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி