உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடிப்படை வசதி கேட்டு தி.மு.க.,கவுன்சிலர்கள் வாக்குவாதம்

அடிப்படை வசதி கேட்டு தி.மு.க.,கவுன்சிலர்கள் வாக்குவாதம்

நம்பியூர் -எலத்துார் பேரூராட்சியில் மொத்தம், 15 வார்டுகள் உள்ளன. அதில், 11 தி.மு.க., கவுன்சிலர்கள், 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த ராஜேஸ்வரி தலைவராக உள்ளார். நேற்று மாதாந்திர கூட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் கிருத்திகா, பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி முன்னிலையில் கூட்டம் நடந்தது.தி.மு.க.,வை சேர்ந்த, 1வது வார்டு கவுன்சிலர் சிவகாமி, 2வது வார்டு கவுன்சிலர் நளினா, 3வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி, 10வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி, 12வது வார்டு கவுன்சிலர் செல்வி, 14வது வார்டு கவுன்சிலர் கவிதா ஆகியோர் கோரமடை, தெற்குப்பதி, எலத்துார், கடமசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் முறையாக வருவதில்லை, மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி