உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / செக்போஸ்ட்டில் லாரியில் ஓய்வெடுத்த டிரைவர் சாவு

செக்போஸ்ட்டில் லாரியில் ஓய்வெடுத்த டிரைவர் சாவு

பவானி:கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40; லாரி டிரைவர். மதுரை மாவட்டம் ராஜபாளையத்துக்கு, தட்டைபயறு ஏற்றிக் கொண்டு, பர்கூர் வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தார். வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகில் லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழவில்லை. அக்கம்பக்கத்தினர் எழுப்பியபோது இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை