உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி

காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி

காங்கேயம்; காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்த வீரன், 57, டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் காங்கேயத்தில் இருந்து திருப்பூருக்கு வாடகைக்காக பிக்-அப் ஆட்டோவில் சென்றார். பெருமாள்மலை அருகே எதிரே வந்த கிரிட்டா கார் மீது மோதியது. இதில் பிக்-அப் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காயமடைந்த வீரனை அப்பகுதி மக்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் வீரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. * சென்னிமலை, மணிமலைகரட்டை சேர்ந்தவர் மீனாட்சி, 65; காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தில், ஒரு தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு முன்தினம் இரவு வட்டமுக்கு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இரு சம்பவங்கள் குறித்தும் காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை