உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மாந்தபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 43; கூலி தொழிலாளி. ஆக்டிங் டிரைவர் வேலையும் பார்த்து வந்தார். முத்துார் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில் டூவீலரில் வீடு திரும்பினார். மேட்டுப்பாளையம் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை