உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விலை உயர்வால் முருங்கை, கேரட் நுகர்வை குறைத்த பொதுமக்கள்

விலை உயர்வால் முருங்கை, கேரட் நுகர்வை குறைத்த பொதுமக்கள்

ஈரோடு: ஈரோடு, நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட்டிற்கு, 950 டன் காய்-கறி நேற்று வரத்தானது. இதில் முருங்கை ஒரு கிலோ, 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில தினங்களுக்கு முன், 120 ரூபாய்க்கு விற்ற நிலையில், ௫௦ ரூபாய் மேலும் உயர்ந்துள்ளது. இதேபோல், 6௦ ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ கேரட், 90 ரூபாயாக எகிறி விட்டது. தக்காளி விலையில் வாரம் தோறும் மாற்றமும், ஏற்றமும் நிகழ்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி, 60, 65 ரூபாய் என இரு ரகங்களாக விற்கப்பட்டது. தாறுமாறான விலை உயர்வால் முருங்கை மற்றும் கேரட் வாங்குவதை, மக்கள் வெகு-வாக குறைத்துக் கொண்டுள்ளனர்.அதேசமயம் மார்க்கெட்டில் நேற்று பிற காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கத்திரி-60, வெண்டை-35, பாவற்காய்-70, புடலங்காய்-40, முள்ளங்கி-45, பட்டை அவரை-80, கருப்பு அவரை-150, பீட்ரூட்-100, பச்சை மிளகாய்-140, உருளை கிழங்கு-60, பீன்ஸ்-120, இஞ்சி-170, காலிபிளவர்-40, பூண்டு-300 ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை