உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

வாழை தோட்டத்தை நாசம் செய்த யானைகள்

சத்தியமங்கலம்:தாளவாடி அருகே இரியபுரம் பகுதியை சேர்ந்தவர் வாணி சென்னஞ்சப்பா. இவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில், நேற்று அதிகாலை யானைகள் புகுந்தன. தின்றும், மிதித்தும், 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி