உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமயபுரம் மாரியம்மன் கோவிலில்ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில்ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு

ஈரோடு: ஈரோடு 31வது வார்டு கம்பர் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அன்னதானக்குழு சார்பில் ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடு மற்றும் மண்டல பூஜை நிறைவு நாள் சிறப்பு பூஜை வரும் 5 மற்றும் 6ம் தேதி நடக்கிறது.வரும் 5ம் தேதி இரவு 7 மணிக்கு விளக்கு பூஜையும், 6ம் தேதி காலை 7 மணிக்கு மண்டல பூஜை நிறைவு நாள் சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.விளக்கு பூஜை கட்டணமாக 101 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பக்தர்கள் தங்களால் இயன்றளவில் பச்சரிசி, நல்லெண்ணெய், திரி, பூஜை பொருட்கள், மாலை, பூ ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி வழிபட வேண்டுமென சமயபுரம் மாரியம்மன் அன்னதானக்குழு சார்பில் கேட்டுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ