மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
31-Jan-2026
தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
31-Jan-2026
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
31-Jan-2026
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
31-Jan-2026
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரிய நலத்திட்ட உதவிகள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில் அரசின் உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம், கட்டுமானத் தொழிலாளர், வீட்டு வேலைத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்பட பல்வேறு நலவாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.தொழிலாளர் துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவை மூலம் செயல்படும் இவ்வாரியங்களில் தொழிலாளிக்கு திருமண உதவி, விபத்து காப்பீடு, உடல்நிலை பாதிப்பு நிதியுதவி, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. துவக்க காலத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பித்த சில நாட்களில், நிவாரணம் கிடைத்தது.கடந்த 2007 முதல் மாவட்டத்தில் உடலுழைப்புத் தொழிலாளர், கட்டுமானத் தொழிலாளர் உள்ளிட்ட அதிக உறுப்பினர்களை கொண்ட நலவாரியங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பல்வேறு நிதியுதவி பெற விண்ணப்பித்தும் உதவி கிடைக்கவில்லை.விண்ணப்பங்களின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு, தகுதியானவை என, தேர்வு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களுக்கும், உதவித்தொகை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.ஈரோட்டில் வறுமை நிலையில் வாடும் தொழிலாளர்கள் அரசின் நலவாரிய நிதியுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நலத்திட்ட உதவி வழங்க காலதாமதமாவதற்கு, அரசு நிதி ஒதுக்காதது காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணம், நலவாரியத்துக்கென தனி அதிகாரிகள் இல்லை.தமிழ்நாடு மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினரும் காலதாமதமின்றி நலவாரிய உதவிகளை வழங்கவும், வாரியங்களுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026
31-Jan-2026