உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு

லாரி ஸ்டிரைக்கால் வெங்காயம் விலை உயர்வு

ஈரோடு: லாரி ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இரண்டே நாளில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது. ஆந்திரா, மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்துதான், ஈரோட்டுக்கு லாரிகள் மூலம் வெங்காயம் வரத்தாகிறது. லாரி ஸ்டிரைக்கால், வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இரண்டே நாளில் வெங்காயம் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெங்காயம் மொத்த வியாபாரி குமார் கூறியதாவது: மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் வெங்காயம் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அதிகளவு வெங்காயம் தமிழகத்துக்கு வரத்தாகிறது. தினமும் 10 லோடு வெங்காயம் ஈரோட்டுக்கு வரத்தானது. லாரி ஸ்டிரைக் காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.பெரியவெங்காயம் கிலோ 15 ரூபாய்க்கு விற்றது, 20 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் கிலோ 12 ரூபாய்க்கு விற்றது, 17 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இரண்டே நாளில் கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது. லாரி வேலை நிறுத்தம் தொடர்ந்தால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை