உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் கம்பம் அகற்றரூ.2.12 லட்சம் நிதி

மின் கம்பம் அகற்றரூ.2.12 லட்சம் நிதி

பெருந்துறை: பெருந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தை இடமாற்ற, 'காலைக்கதிர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெருந்துறையில், சென்னை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூர் நால் ரோடு அருகில் 3,000 மாணவர்கள் படிக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில், பொரிக்கடை முன், மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக, ரோட்டை ஆக்கிரமித்து உள்ளது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மின் கம்பத்தை இடமாற்ற கோரி, 'காலைக்கதிர்' நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தியது.இதன் பயனாக, ''பெருந்துறை டவுன் பஞ்சாயத்து பொது நிதியிலிருந்து, மின்வாரியத்துக்கு ஆகஸ்ட் 18ம் தேதி 2.12 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது,'' என பெருந்துறை பஞ்சாயத்து தலைவர் துளசிமணி தெரிவித்தார். மின்வாரியம் நடவடிக்கை எடுத்து, மின்கம்பத்தை விரைவில் இடமாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை