உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பழைய ஃபோன்களை புதிதாக்கி விற்பனைமோசடி நபர்களால் மக்கள் தொடர் ஏமாற்றம்

பழைய ஃபோன்களை புதிதாக்கி விற்பனைமோசடி நபர்களால் மக்கள் தொடர் ஏமாற்றம்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் பகுதியில் செல்போன் விற்பனையில் மோசடி நபர்கள் உலா வருகின்றனர். பழைய செல்ஃபோனை பல்வேறு ஏமாற்று வேலைகளை செய்து விற்கின்றனர்.பழைய செல்ஃபோன் புதியது போன்ற தோற்றம் செய்து 'பளிச்' என இருக்கும் தோற்றத்துடன், கடைகளிலும், செல்ஃபோன் வாங்க வருபவர்களை தனியாக அழைத்துச் சென்றும், வீடு மற்றும் கடைகளைத் தேடி வந்தும் விற்பனை செய்கின்றனர். 'செல்ஃபோன் புதிது போன்று உள்ளது. ஏன் விற்பனை செய்கிறீர்கள்,' எனக்கேட்டால், 'இந்த ஃபேனில் புளூ டூத் இல்லை. சில ஆப்ஷன்கள் வேலை செய்யவில்லை. எஃப்.எம்., வேலை செய்யவில்லை. அதனால், மாற்றுகிறோம். வேலை செய்யவில்லை என்றால் பணத்தை திரும்பத்தருகிறோம்,' எனக்கூறி விற்பனை செய்கின்றனர்.செல்ஃபோனை வாங்கி சென்று சில நாட்களில் அவற்றில் பேட்டரி உட்பட பல செயல்பாடுகள் செயல்படாமல் போகும். வெளித்தோற்றமும் கொஞ்சம், கொஞ்சமாக மாறி பழைய செல்ஃபோனை போன்ற தோற்றத்துக்கு மாறிவிடும். நம்மிடம் செல்ஃபோனை விற்ற நபரை நம்மால் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிது. எனவே பழைய செல்ஃபோனை தெரிந்த நபர்களிடம் மட்டுமே உத்திரவாதத்துடன் கேட்டு வாங்க வேண்டும். பழைய செல்ஃபோனை வாங்குவதில் விழிப்புணர்வு பொதுமக்களிடையே தேவை. பழைய செல்ஃபோன் விற்கும் மோசடி நபர்களை வெள்ளகோவில் போலீஸார் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ