உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோரிக்கைக்காக ஒரு மேயர் வேட்பாளர்தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைக்காக ஒரு மேயர் வேட்பாளர்தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

ஈரோடு:தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், தங்கள் கோரிக்கைக்காக ஒரு மேயர் வேட்பாளரை நிறுத்துவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு கள் இயக்க மாநில தலைவர் கதிரேசன், திருவண்ணாமலை மாவட்ட விவசாய சங்க தலைவர் புரு÷ஷாத்தமன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.தமிழகத்தில், 1959ல் 'பஞ்சாயத்து ராஜ்' அறிமுகம் செய்ததால், ஆரம்பகல்வி, ஆரம்ப சுகாதாரம், கால்நடை மேம்பாடு, வேளாண்மை போன்ற துறைகள் உள்ளாட்சி அரசாங்கத்தின் அதிகாரமாக இருந்ததால், அத்துறைகள் சிறப்பாக செயல்பட்டது. தி.மு.க., ஆட்சி காலத்தில் மேற்கண்ட துறைகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதால், இவற்றின் தரம் முற்றிலும் குறைந்தது.பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். பார்லிமென்ட் எடுத்த கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளாகவே உள்ளாட்சி உள்ளது. எனவே, அவற்றுக்கு நடத்தப்படும் தேர்தலில் அரசியல் கட்சியின் தலையீடு இல்லாமலும், கட்சி சின்னங்கள் ஒதுக்காமலும் தேர்தல் நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும், 1996ல் நடந்த பொதுத்தேர்தலில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்பாளர் நிறுத்தப்பட்டது போலவே, உள்ளாட்சி தேர்தலிலும் ஒரு மேயர் வேட்பாளரை நிறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ