உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

ஈரோடு: ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், நாளை காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை, வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, வெள்ளாடு வளர்ப்பில் உள்ள விஞ்ஞான முறைகளை விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.விவசாயிகள் தங்கள் வருகையை, வீரப்பன் சத்திரம் சத்தி ரோட்டில் செயல்படும், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரில் அணுகியோ அல்லது 0424 2291 482 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய வேண்டும். இத்தகவலை மையத் தலைவர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் 25ம் தேதிமாயாஜால போட்டிஈரோடு: ஈரோடு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம் சார்பில், மாநில மாயாஜால போட்டி வரும் 25ம் தேதி, ரோடு 'சிடி' ரோட்டரி ஹாலில் நடக்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முன்னணி மாயாஜால நிபுணர்கள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். திருவனந்தபுரம் ராஜமூர்த்தி, ஜிகாம் ஜம்மு, காக்கி நாடா சீனிவாசன் ஆகியோர் மாயாஜால வகுப்பு நடத்துகின்றனர்.மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை குழந்தைகள், பொது மக்களுக்காக பல்வேறு சிறப்பு மாயாஜால கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம். ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி