உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டியுடன் யானைகள் "மறியல் போக்குவரத்து பாதிப்பு

குட்டியுடன் யானைகள் "மறியல் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் இரண்டு யானைகள் குட்டியுடன் நடுரோட்டில் நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் வசிக்கின்றன. யானைகள் மட்டும் அவ்வப்போது ரோட்டோரத்தில் நின்றுகொண்டிருக்கும் அல்லது ரோட்டை கடந்து செல்வதை பார்க்க முடியும். நேற்று காலை ஏழு மணிக்கு, திம்பத்தில் இருந்து அரேபாளையம் செல்லும் ரோட்டில் இரண்டு யானைகள் ஒரு குட்டியுடன் நடுரோட்டில் நின்றுவிட்டன. பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நின்றுவிட்டன. பஸ் டிரைவர்கள் ஹார்ன் அடித்தும் யானைகள் கண்டுகொள்ளாமல் நின்றுகொண்டிருந்தன. அரை மணி நேரத்துக்கு மேல் யானைகள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. ஆசனூர் ரேஞ்சர் சண்முகம் தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து, மறியலில் ஈடுபட்டிருந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பின் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை