உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷனில் பருப்பு, பச்சரிசி தட்டுப்பாடுவிலை ஏற்றத்தால் விநியோகம் குறைப்பு

ரேஷனில் பருப்பு, பச்சரிசி தட்டுப்பாடுவிலை ஏற்றத்தால் விநியோகம் குறைப்பு

ஈரோடு: ரேஷனில் கடந்த இரு மாதமாக பருப்பு, பச்சரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சி பதவியேற்றது முதல் ரேஷனில் பச்சை நிற கார்டுகளுக்கு 20 கிலோவும், அந்தியோதயா திட்ட அட்டைகளுக்கு 35 கிலோவும் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட கிலோவை பச்சரியாக பெற்றுக் கொள்ளலாம். துவரம்பருப்பு கிலோ 30 ரூபாய், உளுந்தம்பருப்பு 40 ரூபாய், பாமாயில் லிட்டர் 25 ரூபாய்க்கு விநியோகிக்கின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில், இரு மாதமாக துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவை மிகச்சிலருக்கே விநியோகிக்கப்பட்டது. சூரம்பட்டி, சாந்தான்கருக்கு பகுதி ரேஷன் கடைகளில் விசாரித்தபோது, 'விலை ஏற்றத்தால் பருப்பு வகைகள் ரேஷன் கடைகளுக்கு மிகக்குறைவாகவே அனுப்பப்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து பருப்பு வாங்கும் சிலருக்கு மட்டுமே விநியோகித்துள்ளோம். பச்சரிசியும் தட்டுப்பாடு நிலவுகிறது,'' என்றனர்.மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் விசாரித்தபோது, 'விலை ஏற்றத்தால் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டதே குறைவுதான். அதனால், மூன்று மூட்டை பருப்பு விநியோகிக்கும் கடைக்கு, ஒன்று அல்லது இரண்டு மூட்டை மட்டும் அனுப்பப்பட்டது. பச்சரிசி தட்டுப்பாடு உள்ளது. சில ரேஷன் கடைகளில் பருப்பை மொத்தமாக சிலரிடம் விற்று விடுவதாக புகார் வந்துள்ளது; விசாரிக்கிறோம்' என்றனர்.தீபாவளி நெருங்கும் நிலையில், ரேஷனில் பச்சரிசி, பருப்பு வகைகள் தட்டுப்பாடு நிலவுவது; பொதுமக்களை வெகுவாக பாதிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி