மேலும் செய்திகள்
கும்பாபிஷேக விழா
9 hour(s) ago
தனியார் பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
9 hour(s) ago
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
9 hour(s) ago
கோட்டை பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
9 hour(s) ago
பெருந்துறை: பெருந்துறை யூனியனில் ஒன்பது ஓட்டுசாவடிகள் பதட்டமானவை என கண்டறிப்பட்டுள்ளது.கள்ளியம்புதூர்: பெருந்துறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாமி, கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் ஆகியோர் யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதால், இங்குள்ள ஓட்டுச்சாவடி பதட்டமானதாக கருதப்படுகிறது.பெரியவேட்டுவபாளையம்: இங்கு 2011 சட்டசபை தேர்தலின் போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் லேசாக தடியடி நடத்தினர். அங்குள்ள ஓட்டுச்சாவடியில் மீண்டும் பதட்டம் ஏற்படலாம் என்று கருதி, போலீஸார் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.சேர்வக்காரன்பாளையம்: மூங்கில்பாளையம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் , பெரியப்பன் என்ற அருணாசலம் போட்டியிடுகிறார். தி.மு.க.சார்பில் அவர் தம்பி சின்னப்பன் என்கிற முத்துசாமி போட்டியிடுகிறார். இருவருக்கு இடையே குடும்ப தகராறு உள்ளது. அவர்களின் சொந்த ஊரான சேர்வகாரன்பாளையம் ஓட்டுச்சாவடியில் பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.கீழேரிபாளையம்: இங்கு இரண்டு ஜாதிக்காரர்கள் சம பங்கு பலத்தில் இருப்பதால், போலீஸாரின் கவனம் திரும்பியுள்ளது.கருமாண்டிசெல்லிபாளையம்: இங்கு தலைவர் பதவிக்கும், வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கும் போட்டியிடுபவர்கள், பணம் மற்றும் அரசியலில் பலம் வாய்ந்தவர்கள் என்பதால், போலீஸார் கூடுதல கவனம் செலுத்துகின்றனர்.இவை ஐந்து கிராமங்களுக்கு உட்பட்ட ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago