உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரோட்டில் பூசணிக்காய்வாகன ஓட்டிகள் அவதி

ரோட்டில் பூசணிக்காய்வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு: நடுரோட்டில் உடைக்கப்பட்ட திருஷ்டி பூசணிக்காய் சிதறிக் கிடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஈரோடு நகரிலுள்ள வணிக நிறுவனங்கள், பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜை நடந்தது. பூஜைக்கு பின், பெரிய பூசணிக்காயை திருஷ்டி சுற்றி, தங்கள் கடைகளுக்கு முன் நடுரோட்டில் உடைத்தனர். நேற்று காலை, நகரில் எங்கு பார்த்தாலும் உடைந்த பூசணிக்காய்கள் சிதறி கிடந்தன. போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்தன. டூவீலர் ஓட்டிகள் சிலர் வழுக்கி விழுந்தனர். போலீஸார் வேண்டுகோளையும் மீறி, பூசணிக்காயை நடுரோட்டில் உடைத்த செயல், பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி