மேலும் செய்திகள்
கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பில் மாற்றம்
18-Dec-2024
ஈரோடு, ஈரோடு காமராஜர் வீதியில் மாநகராட்சி ஆரம்ப பள்ளியின் சேதமான கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் தேர் நிலையை ஒட்டி, மாநகராட்சி மற்றும் மக்கள் பங்களிப்புடன் ஆண், பெண்களுக்கு தனித்தனியே கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கியது. இதுவரை பணி நிறைவு பெறவில்லை.இந்நிலையில் கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல், 10ல் திறக்கப்படுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அதற்குள் கழிப்பிடம் கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட கோரிக்கை எழுந்துள்ளது.
18-Dec-2024