உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மிரட்டி பணம் கேட்ட பழங்குற்றவாளிகள் கைது

மிரட்டி பணம் கேட்ட பழங்குற்றவாளிகள் கைது

ஈரோடு: ஈரோடு, சூளை, பாரதி நகரை சேர்ந்தவர் கென்னடி, 42, கூலி தொழிலாளி. நண்பருடன் சொந்த வேலையாக ஈரோடு அசோகபுரம், சேரன் வீதி அருகே நடந்து வந்தார். அங்கு நின்ற இருவர், கென்னடியை நிறுத்தி, மது குடிக்க, 1,000 ரூபாய் கேட்டனர். பணம் தர மறுக்கவே, தகாத வார்த்தை பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கென்னடி கூச்சலிடவே அப்பகுதியினர் திரண்டதால் இருவரும் ஓட்டம் பிடித்தனர்.கென்னடி புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இதில் ஈரோடு, வைராபாளையம், நாட்ராயன் கோவில் வீதி பொம்மன் மகன் எடயகுமார், 21; கோபால் மகன் உமாபதி, 24, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை