மேலும் செய்திகள்
பூமிதான வாரிய நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற மனு
30-Apr-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம், உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோருடன் வந்து, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:எனக்கு பிரம்மதேசம் பகுதியில், 3 கோடி ரூபாய் மதிப்பில், 3.5 ஏக்கர் விளைநிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்ப தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த துரைசாமி, சுந்தரம் ஆகியோரிடம், 2017ல், 25 லட்சம் கடன் வாங்கினேன். இதற்காக நிலத்தை அவர்கள் பெயருக்கு கிரயம் செய்து தந்தேன். வட்டி, பணம் வழங்கியதும், மீண்டும் நிலத்தை என் பெயருக்கு மாற்றித் தருவதாக கூறினர். கடந்த, 2019ல் அசல், வட்டியுடன் சேர்த்து, 18.50 லட்சம் கொடுத்தேன். மீதி, 13 லட்சத்தை வட்டியுடன் வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினர்.இதற்கிடையில் ஈரோடு மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ஆதிஸ்ரீதருக்கு, நிலத்தை விற்றுள்ளனர். அவர் எனது வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி, கூடுதல் தொகையும் கேட்டார். இதனால் துரைசாமி, சுந்தரத்தை அணுகி, பாக்கி தொகையை வட்டியுடன் தருவதாக கூறியும், நிலத்தை கிரயம் செய்து தர மறுக்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
30-Apr-2025