| ADDED : டிச 25, 2025 04:58 AM
பெருந்துறை,: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்-பாக, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் உற்-பத்தி மானியம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வக்ப் வாரியம், விவசாயிகள் உரிமை பெற்ற (ஜமீன்), 13 லட்சம் ஏக்கர் நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பு செய்துள்ளது. மேலும் பத்திரப்பதிவிற்கும் தடை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு, இனாம் ஜமீன் நிலங்களின் நில உரிமையை உறுதி செய்ய உரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உர மானியத்திற்கு பதி-லாக, ஆண்டுதோறும் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறை-வேற்ற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு, 500 விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் விவசாயிகளை சந்திக்க வேண்டும் என்றால், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.