உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்

பயிர்களை நாசமாக்கும் யானைகளால் அச்சம்

சத்தியமங்கலம்,: தாளவாடி மலை கிராமத்தில் இரவில் வரும் யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவது தொடர்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.தாளவாடி மலை கிராம பகுதியில் உள்ள இக்கலுார், திகினாரை, அருள்வாடி, சூசையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், இரவானதும் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள், விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.கடந்த மூன்று நாட்களாக தாளவாடி அருகே சேஷன் நகரில், இந்து மகேந்திர குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியை உடைத்து புகுந்த யானைகள், இரண்டு ஏக்கரிலான சோளம், 400 வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இவற்றின் சேத மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் மலை கிராம விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் கிராமங்களில் நுழையாமல் தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி