மேலும் செய்திகள்
சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு
11-Dec-2025
இரட்டையர் உள்பட மூன்று பேர் மாயம்
25-Nov-2025
ஈரோடு: ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 49; திருமணம் ஆகாதவர். நகைக்கடை வைத்திருந்தார். சரிவர லாபம் இல்லாததால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தார். நேற்று முன்தினம் மாலை உணவு டெலிவரி செய்ய, நசியனுார் சாலை நல்லிதோட்டம் கனரா வங்கி ஏ.டி.எம்., முன் எலக்ட்ரிக்கல் பைக்கில் சென்றார்.பின்னால் அதிவேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.விபத்து தொடர்பாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் கிருஷ்ணகுமார் மீது, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
11-Dec-2025
25-Nov-2025