உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

நிதி நிறுவனத்தில் மோசடி; மேலாளர் மீது வழக்கு

கோபி: நிதிநிறுவனத்தில் மோசடி செய்த, கிளை மேலாளர் மீது, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோபியை சேர்ந்த ஹரிஹரன், 28, இங்குள்ள நிதி நிறுவனத்தில், கிளை மேலாளராக பணிபுரிகிறார். இவர் தான் பணிபுரியும் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய, 33.47 லட்சம் ரூபாயை, தனது தனிப்பட்ட சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்தார். மேலும், கடன் தொகையை முழுவதுமாக செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, நிதி நிறுவனத்தின் பெயரில் போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து மோசடி செய்துள்ளதாக, அதன் மண்டல மேலாளர், குருசாமி, 45, புகார் கொடுத்தார். இதையடுத்து, கிளை மேலாளர் ஹரிஹரன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ