விபத்தில் பழ வியாபாரி பலி
கோபி, கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் சேகர், 60, பழக்கடை வியாபாரி; இவரின் மனைவி லட்சுமி, 55; இருவரும் மொபட்டில் கடந்த, 16ம் தேதி இரவு மொடச்சூர் சாலையில் சென்றனர். அப்போது தனசேகர், 40, ஓட்டி வந்த பல்சர் பைக், மொபட் மீது மோதியதில் தம்பதி காயமடைந்தனர். கோபி தனியார் மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சேகர் இறந்தார். லட்சுமி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.