உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேவாலயங்கள் பழுது பார்க்க நிதியுதவி

தேவாலயங்கள் பழுது பார்க்க நிதியுதவி

ஈரோடு:சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணி மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படுகிறது.தேவாலய கட்டட வயது, 10 முதல், 15க்குள் இருந்தால், 10 லட்சம் ரூபாய் வரை, 15 முதல், 20 ஆண்டுக்குள் இருந்தால், 15 லட்சம் ரூபாய், 20 ஆண்டுக்கு மேல் இருந்தால், 20 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, ஸ்தல ஆய்வுடன் இரு தவணையாக வங்கி கணக்கில் நிதியுதவி செலுத்தப்படும். பயன் பெற விரும்புவோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி