உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆற்றில் குளித்த சிறுமி சாவு

ஆற்றில் குளித்த சிறுமி சாவு

தாராபுரம்,தாராபுரம், காமன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியர் துக்கையண்ணன், 41, ரேவதி, 36; பெட்ரோல் பங்க் ஊழியர்கள். இவர்களின், 15 வயது மகள், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியிருந்தார். கொளிஞ்சிவாடியில் உள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்க தனது உறவினர்களுடன் நேற்று மதியம் சென்றார். எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கினார். உறவினர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தாலும் இறந்து விட்டார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை