மேலும் செய்திகள்
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வாகனம் தயார்
27-Jun-2025
கோபி, கோபி அருகே, ல.கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தில், அறுவை சிகிச்சைக்கான பணி நேற்று முதல் துவங்கியுள்ளது.பணிகளை கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''கோபி நகராட்சி பகுதிகளில், தெரு நாய்களால், பள்ளி மாணவர்கள் முதல், முதியவர்கள் வரை பாதிப்பதாக புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோபியில் நாய்களுக்கான கருத்தடை மையம் துவங்கப்பட்டது. முதல்கட்டமாக 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இப்பணி நடக்கிறது. தினமும், 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படவுள்ளது,'' என்றார்.கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் எம்.பி., சத்தியபாமா, நகர செயலாளர்கள் பிரினியோ கணேஷ், முத்துரமணன் ஆகியோர் பங்கேற்றனர்.
27-Jun-2025