உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

அரசு மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

பெருந்துறை: பெருந்துறையில் உள்ள ஈரோடு மாவட்ட அரசு மருத்துவ கல்-லுாரி பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜ-கோபால் சுன்கரா தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் செந்-தில்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி, 100 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசினார்.கல்லுாரியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை, 150 ஆக அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், கல்லுாரி முதல்வரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். விழாவில் கல்லுாரி துணை முதல்வர் மோகனசுந்தரம், உறைவிட மருத்துவர் ராணி, மருத்துவ கண்காணிப்பாளர் செந்தில் செங்-கோட்டையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை