உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தான்தோன்றிமலையில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

தான்தோன்றிமலையில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

கரூர், கரூர், தான்தோன்றிமலை சுங்ககேட்டில் திருமுருகன் மஹாலில், தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நேற்று தொடங்கியது. ஆர்.டி.ஓ., முகமது பைசல் தொடங்கி வைத்தார். இங்கு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கைத்தறி துணிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில், புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சிறுமுகை மென் பட்டு சேலைகள், மதுரை சுங்கடி காட்டன், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், நீலகிரி தோடர் எம்பிராய்டரி சால்வைகள் உள்பட பல்வேறு துணி வகைகள் விற்பனை வைக்கப்பட்டுள்ளன. 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும், 17 வரை தினமும் காலை, 10.00 மணி முதல் இரவு, 9.00 மணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை