உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்துக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்

இந்துக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுாரில், இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்துக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதை தொடர்ந்து காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:தமிழகத்தில் அரசு அதிகாரிகள், தி.மு.க.,வினரின் பேச்சை கேட்டு செயல்படுகின்றனர். இதனால்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தி.மு.க.,வின் ஒன்றிய செயலாளர்களாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். இதில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களை இடிப்பது, இந்துக்கள் மீது பொய் வழக்கு போடுவது உள்ளிட்ட தமிழக அரசின் நடவடிக்கைகளை, இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ